நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தஞ்சங் பாலாய் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் மலேசியர் அல்ல, இந்தோனேசிய மாணவரே கைது செய்யப்பட்டுள்ளார்; பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: ஹுசைன் ஒமர் கான்

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தியதற்காக ஒரு மலேசிய மாணவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மலேசிய அரச காவல்துறை மறுத்துள்ளதுடன், சந்தேக நபர் ஒரு இந்தோனேசியர் என்றும் கூறியுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு இந்தோனேசியரின் உதவியுடன், மலேசிய போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தலைவர் டத்தோ ஒமர் கான் கூறினார்.

சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்ப வேண்டாம் என தேசிய குற்றப் புலனாய்வுத் துறை பொதுமக்களை வலியுறுத்துவதுடன், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைக் கையாள்வதற்காக இந்தோனேசிய காவல்துறையுடன் இணைந்து செயல்படுவதையும் உறுதி செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset