நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் மலாக்கா முதலமைச்சர் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை 

மலாக்கா: 

மலாக்கா மாநில முன்னாள் முதலமைச்சர் சுலைமான் அலி எதிர்வரும் மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று உறுதிப்படுத்தினார். 

கடந்த 2020 முதல் 2023 வரை மலாக்கா மாநில முதலமைச்சராக அவர் பணியாற்றிருந்தார். 

சுலைமான் முதன்முதலில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 13-வது பொதுத் தேர்தலில் லெண்டு மாநிலத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

அதனை அடுத்த இரண்டு பதவிக்காலங்களுக்கும் வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொண்ட அவர், 2021ஆம் ஆண்டு மலாக்கா மாநிலத் தேர்தலில் 3,104 வாக்குகள் என்ற கணிசமான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, அவர் மற்றொரு பதவிக்காலத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டார், ஆனால் ரவுஃப் அவரை உயர் பதவியிலிருந்து நீக்க முயற்சிப்பதாக வதந்திகள் பரவின.

பல மாதங்களாகப் பதவி விலகப் போவதில்லை என்று மறுத்து வந்த சுலைமான், மார்ச் 2023-ல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இறுதியில் ரவுஃப் அப்பதவியை ஏற்றார்.

மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset