செய்திகள் மலேசியா
மலாக்காவில் தேசிய முன்னணி கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிப்பு
கோலாலம்பூர்:
மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி 21 சட்டமன்றத் தொகுதிகளின் தற்போதைய நிலையைத் தக்கவைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், மாநிலத்தில் கூடுதலாக மூன்று அல்லது நான்கு இடங்களையும் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் ஓங் கியான் மிங்,
நீல அலையின் உணர்வு, மனநிலையின் அடிப்படையில், மலாக்காவில் நம்பிக்கை கூட்டணியிடம் இருந்து தேசிய முன்னணி குறைந்தது ஒன்று அல்லது இரண்டு இடங்களையாவது கைப்பற்ற முடியும் என்று கூறினார்.
முன்னர் அமானா வசம் இருந்த புக்கிட் கட்டில் மாநிலத் தொகுதியும், ஜசெக வசம் இருந்த ஆயர்குரோ தொகுதியும் இதில் அடங்கும் என்று கூறினார்.
கடந்த தேர்தலில், துயோங் மாநிலத் தொகுதியில் ஜசெக வேட்பாளர் தேசிய முன்னணி வேட்பாளரிடம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றபோதிலும், இந்த முறை அந்தக் குறிப்பிட்ட இடங்களைத் தங்கள் கட்சியால் மீண்டும் கைப்பற்ற முடியாது என்று அவர் கருதுவதாகக் கூறினார்.
தேசிய முன்னணி, பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்படும் என்று நான் கருதுவதால், அதன் இடங்களின் எண்ணிக்கை 21-லிருந்து 24 அல்லது 25 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 12:34 pm
தீபாவளி சந்தை; சிரம்பான் நகர வணிகர்களின் பிரச்சினைகள் தீர்வுக் காணப்படும்: டத்தோஶ்ரீ சரவணன் நம்பிக்கை
October 13, 2026, 12:08 pm
மலேசிய மலாய்க்காரர்களை திருமணம் செய்வதால் வெளிநாட்டினர் பூமிபுத்ராக்களாக ஆகிவிடுவதில்லை: சைபுடின்
October 13, 2026, 12:07 pm
புகைமூட்டம்: ஜொகூர் போலிஸ் 13 மாவட்டக் கட்டுப்பாட்டு மையங்களைச் செயல்படுத்தியது
October 13, 2026, 12:06 pm
பாலிடெக்னிக் மாணவி எலிசா கொலை வழக்கில் 19 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு
October 13, 2026, 12:05 pm
கத்தியால் குத்தப்பட்ட சீனப் பெண், முன்னாள் காதலருக்கு எதிரான விசாரணையை விரைவுபடுத்தக் கோரியுள்ளார்
October 13, 2026, 10:41 am
முன்னாள் மலாக்கா முதலமைச்சர் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை
October 13, 2026, 10:14 am
வணிக வளாகம் அருகே ஆடவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்
October 13, 2026, 10:13 am
