நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மலாய்க்காரர்களை திருமணம் செய்வதால் வெளிநாட்டினர்  பூமிபுத்ராக்களாக ஆகிவிடுவதில்லை: சைபுடின்

கோலாலம்பூர்:

இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் வெளிநாட்டவர் ஒரு மலாய் முஸ்லிமைத் திருமணம் செய்துகொள்வது, அவர்களின் உண்மையான வம்சாவளி நிலையை மாற்றாது.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை கூறினார்.

தேசியப் பதிவு இலாகா ஒரு வெளிநாட்டவரின் வம்சாவளியைத் திருமணத்தின் அடிப்படையில் தீர்மானிப்பதில்லை.

மேலும், ஒரு தனிநபர் பூமிபுத்ரா அந்தஸ்து பெற்றவரா அல்லது இல்லையா,  பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் சில உரிமைகள் அல்லது சலுகைகளை அனுபவிப்பதற்கான தகுதியுடையவரா என்பதைத் தீர்மானிப்பது தேசியப் பதிவுத் துறையின்  அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

ஏனெனில் இந்த விவகாரம், சம்பந்தப்பட்ட முகமைகள் அல்லது அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட சட்டங்கள், கொள்கைகள்,  நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று அவர் மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அவர் கூறினார்.

இந்த நாட்டின் குடிமக்களான மலாய்க்காரர்களைத் திருமணம் செய்துகொண்டால், முஸ்லிம் வெளிநாட்டினர் பூமிபுத்ரா அந்தஸ்து பெற்றவர்களாகக் கருதப்படுவார்களா என்பதை அறிய விரும்பிய லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  பாங் ஹோக் லியோங்கின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சைபுடின் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset