செய்திகள் மலேசியா
புகைமூட்டம்: ஜொகூர் போலிஸ் 13 மாவட்டக் கட்டுப்பாட்டு மையங்களைச் செயல்படுத்தியது
ஜொகூர்பரு:
ஜொகூர் மாநில அரசுடன் இணைந்து புகைமூட்டச் சூழலை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் முயற்சியாக, ஜொகூர் போலிஸ் மாநிலம் முழுவதும் உள்ள 13 மாவட்டக் கட்டுப்பாட்டு மையங்களையும் நேற்று முதல் செயல்படுத்தியது.
ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத் இதனை கூறினார்.
தற்போது மாநிலத்தைப் பாதித்து வரும் புகைமூட்டத்தின் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் திறம்படக் கையாள்வதை உறுதி செய்வதற்காக, ஜொகூர் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாவட்ட அளவில் மாவட்டக் கட்டுப்பாட்டு மையங்களைச் செயல்படுத்துவது, அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப அவ்வப்போது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ள வழிவகுக்கிறது.
புகைமூட்டம் பிரச்சினை தொடர்பாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள புகைமூட்ட நிலவரத்தைக் கண்காணிக்க அனைத்து மாவட்டக் கட்டுப்பாட்டு மையங்களையும் நேற்று நாங்கள் செயல்படுத்தினோம்.
இதன் மூலம், மாநில அரசுடன் இணைந்து, ஜொகூரைப் பாதிக்கும் புகைமூட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகள் அல்லது சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும் என்று அவர் இன்று ஜொகூர் போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2026, 12:34 pm
தீபாவளி சந்தை; சிரம்பான் நகர வணிகர்களின் பிரச்சினைகள் தீர்வுக் காணப்படும்: டத்தோஶ்ரீ சரவணன் நம்பிக்கை
October 13, 2026, 12:08 pm
மலேசிய மலாய்க்காரர்களை திருமணம் செய்வதால் வெளிநாட்டினர் பூமிபுத்ராக்களாக ஆகிவிடுவதில்லை: சைபுடின்
October 13, 2026, 12:07 pm
மலாக்காவில் தேசிய முன்னணி கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிப்பு
October 13, 2026, 12:06 pm
பாலிடெக்னிக் மாணவி எலிசா கொலை வழக்கில் 19 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு
October 13, 2026, 12:05 pm
கத்தியால் குத்தப்பட்ட சீனப் பெண், முன்னாள் காதலருக்கு எதிரான விசாரணையை விரைவுபடுத்தக் கோரியுள்ளார்
October 13, 2026, 10:41 am
முன்னாள் மலாக்கா முதலமைச்சர் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை
October 13, 2026, 10:14 am
வணிக வளாகம் அருகே ஆடவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்
October 13, 2026, 10:13 am
