நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

19 இடங்களில் IPU காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு: சபா, சரவாக் மாநிலங்களில் மீண்டும் புகைமூட்டம் 

பெட்டாலிங் ஜெயா: 

நாடு முழுவதும் உள்ள 19 இடங்களில் காற்றின் தரக்குறியீடான IPU குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது 

கிழக்கு மலேசியா மாநிலங்களான சபா, சரவாக் மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்து மீண்டும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது 

தீபகற்ப மலேசியாவின் தென்மாநிலமான ஜொகூரில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, லார்க்கின், கோத்தா திங்கி, குளுவாங், தங்காக் ஆகிய பகுதிகளில் காற்றின் குறியீடு 150க்கு மேல் பதிவாகியுள்ளது 

சரவாக் மாநிலத்தின் ஶ்ரீ அமான், செரியான் மற்றும் சமராஹான் பகுதிகளில் முறையே காற்றின் தரம் 172ஆகவும் 154ஆகவும் மற்றும் 129ஆகவும் உள்ளன 

கிள்ளான் பள்ளத்தாக்கில் காற்றின் தரம் மிதமான அளவில் இன்று காலை வேளையில் பதிவானது

புத்ராஜெயாவில் 99ஆகவும் ஜொஹான் செத்தியாவில் 90ஆகவும் கிள்ளானில் 87ஆகவும் பதிவு செய்யப்பட்டன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset