நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டம்: கோலாலம்பூர், புத்ராஜெயா உட்பட 4 மாநிலங்கள் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும்: கல்வி அமைச்சர்

கோலாலம்பூர்:

புகைமூட்டம் காரணமாக, நான்கு மாநிலங்கள், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை முதல் மூடப்படும்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும்.

பகாங்கில் உள்ள ரொம்பின் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்றும் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், பெர்லிஸ், பினாங்கு, பேரா, சபா, சரவா, லாபுவான் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

அனைத்து மாநில கல்வித் துறைகள், மாவட்ட கல்வி அலுவலகங்களையும் புகைமூட்ட நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, தேவைப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டுக்கொண்டுள்ளேன் என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset