செய்திகள் மலேசியா
வழிபாட்டுத் தலங்கள், உதவி பெறும் பள்ளிகளுக்கான வாடகையை மாதத்திற்கு 1 ரிங்கிட் என RAC நிர்ணயித்துள்ளது: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
ரயில்வே சொத்துகள் கழகத்தின் (RAC) கீழ் உள்ள ஒதுக்கப்பட்ட நிலங்களில் இயங்கும் வழிபாட்டுத் தலங்கள், உதவி பெறும் பள்ளிகளுக்கான சிறப்பு வாடகை விகிதம், அக்டோபர் 1 முதல் மாதத்திற்கு 1 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை தெரிவித்தார்.
இந்த தரப்படுத்தல், இதற்கு முன்னர் இருந்த வெவ்வேறு வாடகை விகிதங்களுக்குப் பதிலாக வந்துள்ளது.
இதன் மூலம் 49 வழிபாட்டுத் தலங்கள், நான்கு மூலதன உதவி பெறும் பள்ளிகள் இதில் பயன் பெறும்.
சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களும் பள்ளிகளும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் அல்ல என்பதால், RAC-இன் சமூக கடப்பாட்டுத் திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
முன்பு தெளிவான கொள்கை எதுவும் இல்லை, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெயரளவிலான கட்டணங்களும் வசூலிக்கப்படவில்லை.
சிலவற்றிற்கு 100 ரிங்கிட், சிலவற்றிற்கு 150 ரிங்கிட் என வசூலிக்கப்பட்டது.
எனவே, இப்போது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் என்ற இந்த வகைக்கு மட்டும் நாங்கள் இதை ஒருங்கிணைக்கிறோம். என்று அவர் கூறினார்.
வழிபாட்டுத் தலங்கள், மூலதன உதவிப் பள்ளிகளுக்கான சிறப்பு வாடகைக் கட்டண அறிவிப்புக் கடிதத்தை ஒப்படைக்கும் விழாவிற்குப் பிறகு இன்று இங்குள்ள மெனாரா RAC-ல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த விழாவில் போக்குவரத்து அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ எம். ஜனசந்திரனும் கலந்து கொண்டார்.
இதை இலவசமாக வழங்குவதற்குப் பதிலாக, வாடகைக் கட்டணத்தை 1 ரிங்கிட் என நிர்ணயிப்பதற்கான காரணம், சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களும் பள்ளிகளும் சட்டப்பூர்வமான குத்தகைதாரர்களாகத் தொடர்வதை உறுதிசெய்து, அதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பையும் உறுதித்தன்மையையும் வழங்குவதே ஆகும் என்று அந்தோனி லோக் கூறினார்.
இருப்பினும், வாகனப் பட்டறைகள் போன்ற வணிக அல்லது தொழில் நடவடிக்கைகளுக்காக RAC நிலத்தைப் பயன்படுத்தும் குத்தகைதாரர்களுக்கு இந்தச் சிறப்பு வாடகைக் கட்டணம் பொருந்தாது.
அவர்கள் வணிக வாடகைக் கட்டணத்திற்கே உட்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 11:05 pm
மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். ராஜனை உடல் நலம் விசாரித்தார் துணையமைச்சர் தியோ நீ சிங்
October 7, 2026, 11:05 pm
14ஆவது ரோயல் சிலாங்கூர் கிளப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க டார்ட்ஸ் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு
October 7, 2026, 11:02 pm
புகைமூட்டம்: நாளை முதல் ஜொகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 2 நாட்களுக்கு மூடப்படும்
October 7, 2026, 4:42 pm
19 வயது மாணவி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கு பொறாமையே காரணம்: போலிஸ்
October 7, 2026, 2:49 pm
வீட்டுக்காவல் தொடர்பான செயல்பட்டு தரவிதிமுறைகள்: நஜிப்பிடம் சிறைத்துறை வழங்கிவிட்டது
October 7, 2026, 1:46 pm
