நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானின் 10 முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கு, ஆட்சிக் குழு அறைகளுக்குள் நுழைய மட்டுமே தடை: சட்டத்துறை தலைவர்

கோலாலம்பூர்:

கடந்த  செப்டம்பர் 24 அன்று தங்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலானின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக இருந்த 10 மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆட்சிக் குழு அறைகளுக்குள் நுழைய மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள், அவர்கள் இனி மாநில அரசாங்க நிர்வாகத்தின் உறுப்பினர்கள் அல்ல என்பதாகும்.

இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற தகுதியில் அவர்கள் மாநில அரசாங்கக் கட்டிடத்திற்குள் நுழையலாம், அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம்.

குறிப்பாக தத்தமது வாக்காளர்களுக்கு உதவுவதற்கும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றலாம்.

இந்தத் தடையின் காரணமாக, முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அலுவலகத்தில் விட்டுச் சென்ற தனிப்பட்ட பொருட்களை எடுப்பதற்காக உட்பட, தத்தமது அறைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ முகமது டுசுகி மொக்தார் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற முறையில், அவர்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளை முடிக்க விஸ்மா நெகிரிக்கு வரலாம்.

ஆனால் அவர்கள் இனி மாநில அரசாங்க நிர்வாகத்தின் உறுப்பினர்கள் அல்ல என்பதால், நிர்வாகக் குழு அறைகளுக்குள் நுழைய அனுமதி இல்லை என்று  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset