செய்திகள் மலேசியா
14ஆவது ரோயல் சிலாங்கூர் கிளப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க டார்ட்ஸ் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு
கோலாலம்பூர்:
ரோயல் சிலாங்கூர் கிளப் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க டத்தாரான் மெர்டேகா கிளப் ஹவுஸில், 14ஆவது டார்ட்ஸ் போட்டியை அக்டோபர் 10 முதல் 11 வரை நடத்தவுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் பெருமைக்குரிய போட்டியில், 20 முன்னணி கிளப்புகள், நிறுவனங்களைச் சேர்ந்த 32 அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடவுள்ளன.
போட்டியில் பங்கேற்கும் முன்னணி நிறுவனங்களில் ரோயல் லேக் கிளப், ரோயல் போர்ட்டிக்சன் யாட் கிளப், மலேசிய பார் ஆகியவை இடம் பெறுகின்றன.
நிறுவனங்களின் ஆதரவும், அர்ப்பணிப்புடன் செயல்படும் ரோயல் சிலாங்கூர் கிளப் உறுப்பினர்களின் தனிப்பட்ட நன்கொடைகளும் இணைந்து வழங்கும் நிதியுதவியுடன் நடைபெறும் இவ்வாண்டுப் போட்டியில், மொத்தமாக 6,100.00 ரிங்கிட் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
ரோயல் சிலாங்கூர் கிளப் அணி, வலுவான வீரர் பட்டியலுடன் போட்டியில் களமிறங்குகிறது.
முன்னாள் தேசிய சாம்பியன்களான விக்டர் பவுலோஸ், கானி லூ ஆகியோர் அணிக்கு தலைமைத்துவம் வழங்கவுள்ளனர்.
அவர்களுடன், ரோயல் சிலாங்கூர் கிளப்பின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரரான எஸ். எஸ். ரூபன் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற Altis Unseeded Challenge Final Series போட்டியின் இறுதிச் சுற்றில் அபாரமான வெற்றியைப் பெற்ற உற்சாகத்துடன் ரூபன் இப்போட்டியில் பங்கேற்கிறார்.
உயர்மட்ட விளையாட்டு போட்டிகளுக்கு அப்பால், இந்த ஆண்டுப் போட்டி ராயல் சிலாங்கூர் கிளப்பிற்கு ஒரு முக்கியமான வரலாற்றுச் சிறப்பையும் கொண்டுள்ளது.
டத்தாரான் மெர்டேகாவில் அமைந்துள்ள ராயல் சிலாங்கூர் கிளப்பின் குத்தகை 2086ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை இந்த நிகழ்வு அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடுகிறது.
இந்த முக்கியமான குத்தகை நீட்டிப்பு, கிளப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் அடுத்த 60 ஆண்டுகளுக்கும் விளையாட்டு, சமூக மற்றும் பாரம்பரிய நடவடிக்கைகளுக்காக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.
ராயல் சிலாங்கூர் கிளப்பின் விளையாட்டுத் தலைவர் ஜிமி லோ கூறுகையில்:
நமது வரலாற்றுச் சிறப்புமிக்க வளாகத்தில் நாடு முழுவதிலுமிருந்து சிறந்த டார்ட்ஸ் வீரர்களை வரவேற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
இந்த 14ஆவது பதிப்பு எங்களுக்கு இரட்டிப்பு சிறப்புடையதாகும். விக்டர் மற்றும் கானி போன்ற முன்னணி வீரர்களுடன், ரூபன் போன்ற வளர்ந்து வரும் திறமையாளர்களும் தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துகின்றனர்.
அதே நேரத்தில், டத்தாரான் மெர்டேகாவில் உள்ள எங்களது இல்லம் 2086ஆம் ஆண்டு வரை பாதுகாக்கப்பட்டுள்ளதை கொண்டாடுகிறோம். இதன் மூலம் இந்தச் சிறப்புமிக்க பாரம்பரியம் எதிர்கால தலைமுறைகளுக்கும் நிலைத்திருப்பதை உறுதி செய்கிறோம்
இப்போட்டிகள் 2026 அக்டோபர் 10, சனிக்கிழமை காலை தொடங்கி, அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரமாண்ட இறுதிப் போட்டியுடன் நிறைவடையும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 11:05 pm
மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். ராஜனை உடல் நலம் விசாரித்தார் துணையமைச்சர் தியோ நீ சிங்
October 7, 2026, 11:02 pm
புகைமூட்டம்: நாளை முதல் ஜொகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 2 நாட்களுக்கு மூடப்படும்
October 7, 2026, 4:42 pm
19 வயது மாணவி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கு பொறாமையே காரணம்: போலிஸ்
October 7, 2026, 2:49 pm
வீட்டுக்காவல் தொடர்பான செயல்பட்டு தரவிதிமுறைகள்: நஜிப்பிடம் சிறைத்துறை வழங்கிவிட்டது
October 7, 2026, 1:46 pm
