செய்திகள் மலேசியா
இந்திய தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை வலுப்படுத்த பெர்காட் தீபாவளி திட்டம் உதவியாக இருக்கும்: பிரிமாஸ்
கோலாலம்பூர்:
இந்திய தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை வலுப்படுத்த பெர்காட் தீபாவளி திட்டம் பெரும் உதவியாக இருக்கும்.
பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜெ. சுரேஷ் கோவிந்தசாமி கூறினார்.
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு மூலம் தெக்குன் அறிமுகப்படுத்தியுள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான சிறு குறு நிறுவனங்களுக்கான பெர்காட் தீபாவளி நிதியுதவித் திட்டத்தை பிரிமாஸ் வரவேற்கிறது.
இந்த முயற்சி இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில்முனைவோருக்கு, குறிப்பாக தகுதியுடைய உணவக உரிமையாளர்கள், உணவு விற்பனையாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக் காலத்திற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள முக்கியமான ஆதரவை வழங்குகிறது.
மொத்தம் 30 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுடன், இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 30,000 ரிங்கிட் வரை நிதியுதவி பெற முடியும்.
திருப்பிச் செலுத்தும் காலம் 12 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் 3 அக்டோபர் முதல் 8 நவம்பர் 2026 வரை திறந்திருக்கும்.
உணவக உரிமையாளர்கள், உணவு விற்பனையாளர்களைப் பொறுத்தவரை, மூலப்பொருட்களை வாங்குவதற்கும், கையிருப்பை அதிகரிப்பதற்கும், அன்றாட செயல்பாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் போதுமான செயல்பாட்டு மூலதனம் மிகவும் அவசியமானது.
இந்த நிதியுதவி, கேட்டரிங் ஆர்டர்களை ஏற்றுக் கொள்வதற்கும், தீபாவளி காலத்தில் அதிகரிக்கும் வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்திய தொழில்முனைவோரின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பட்ட தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம், தெக்குன் ஆகியோருக்கு பிரிமாஸ் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.
இந்த ஆதரவு, சிறு வியாபாரிகள் தங்களது தொழில் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகளை மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளவும், பண்டிகைக் காலத்தில் உருவாகும் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் நம்பிக்கையை அளிக்கிறது.
இதன் பயன் அவர்களின் குடும்பங்கள், பணியாளர்கள், அவர்களது தொழில்களைச் சார்ந்திருக்கும் சமூகத்தினருக்கும் சென்றடையும் என்று அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 10:56 pm
யோங் பெங் மாணவியின் மரணம் குறித்து ‘உடனடி, முழுமையான, வெளிப்படையான’ விசாரணைக்கு பிரதமர் உத்தரவு
October 4, 2026, 3:47 pm
தனித்து போட்டியிடும் தேசிய முன்னணியின் முடிவை மஇகா முழுமையாக வரவேற்கிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 4, 2026, 3:28 pm
