செய்திகள் மலேசியா
யோங் பெங் மாணவியின் மரணம் குறித்து ‘உடனடி, முழுமையான, வெளிப்படையான’ விசாரணைக்கு பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர்:
ஜோஹோரின் யோங் பெங்கில் உள்ள ஒரு பள்ளியில், நான்காம் படிவ மாணவியான ஐரீன் சோஃபியா முஹம்மது கைருல் ஃபைசல் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
உண்மையை வெளிக்கொணர விரைவான, வெளிப்படையான விசாரணைக்கு அவர் வலியுறுத்தியதோடு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள கூட்டுப் பொறுப்பை அன்வார் எடுத்துரைத்ததோடு, அவர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக 16 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா கூறினார்.
விசாரணை செயல்முறையை மதிக்குமாறு பொதுமக்களையும் கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 3:47 pm
தனித்து போட்டியிடும் தேசிய முன்னணியின் முடிவை மஇகா முழுமையாக வரவேற்கிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 4, 2026, 3:28 pm
