நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டார் உத்தாமா பள்ளி கொலை வழக்கு: பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அரசு உட்பட 17 பேர் மீது பாதுகாப்பு கடமை மீறல்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்

கோலாலம்பூர்:

யாப் ஷிங் ஷுயனின் குடும்பத்தினர், அவரது கடமை மீறல்களே அவரது கத்திக்குத்து மரணத்திற்குக் காரணம் என்று கூறி, குற்றவாளியின் பெற்றோர், பள்ளி அதிகாரிகள், அரசு நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

வோங் லீ பிங், இறுதிச் சடங்கு செலவுகள், பொதுவான சேதங்களுக்காக RM120,602 சிறப்பு இழப்பீட்டை அவர்கள் கோரியுள்ளார். 

மேலும், சிறுவனின் மனநலப் பிரச்சினைகளை பிரதிவாதிகள் முன்கூட்டியே கணித்திருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெற்றோர், பள்ளி, அரசு நிறுவனங்களின் அலட்சியத்தால் இந்தத் துயரச் சம்பவம் தடுக்கப்படவில்லை என்றும், இது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியதோடு கடும் மன உளைச்சலைத் தந்துள்ளது என்றும் அந்த வழக்கு வாதிடுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset