செய்திகள் மலேசியா
தேசிய பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 8,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்
கோலாலம்பூர்:
தேசிய பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கண்காட்சி 2026 மூலம், 200 நிறுவனங்கள் வழங்கும் 8,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் பட்டதாரிகளுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் வழங்கப்படும்.
இக்காண்காட்சி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில்அக்டோபர் 3, 4 ஆகிய இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளது.
தேசிய அளவிலான இந்த வேலை வாய்ப்புத் திருவிழா, பட்டதாரிகள் நிறுவனங்களை நேரடியாகச் சந்தித்து உரையாடவும், பொருத்தமான தொழில் துறைகளை ஆராயவும், தங்களின் சந்தை மதிப்பை அதிகரிக்க வழிகாட்டுதல்களைப் பெறவும் ஒரு தளத்தை வழங்குகிறது.
இதில் பங்கேற்கும் முக்கிய நிறுவனங்களில் ஊழியர் சேமநிதி (EPF), பேங்க் நெகாரா மலேசியா, புர்சா மலேசியா மற்றும் மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) ஆகியவை அடங்கும் என்று பெர்கேசோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், பிரசரானா மலேசியா பெர்ஹாட் மற்றும் ஆயுதப்படைகள் நிதி வாரியம் ஆகியவற்றின் ஆதரவையும் இந்த வேலைவாய்ப்புத் திருவிழா பெற்றது.
இந்நிறுவனங்களும் பார்வையாளர்களுக்கு வேலைகளை வழங்கின.
வழங்கப்படும் வேலை வாய்ப்புகள், தகவல் மற்றும் தொடர்பு, நிதி, உற்பத்தி, தொழில்முறை, அறிவியல், தொழில்நுட்ப நடவடிக்கைகள், போக்குவரத்து, சேமிப்பு, சுகாதாரம், சமூகப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் திறன் நிலைகளையும் உள்ளடக்கியுள்ளன.
இன்னும் சுவாரஸ்யமாக, வழங்கப்படும் மொத்த காலிப் பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை.
அதாவது 52.91 சதவீதம், மாதத்திற்கு 3,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான சம்பளத்தை வழங்குகின்றன.
இதில், சுமார் 3,000 ரிங்கிட்டில் தொடங்கும் சம்பளத்துடன் கூடிய கணக்கு நிர்வாகி (Account Executive) பதவிகளும் அடங்கும்.
அதே சமயம், தகவல் தொழில்நுட்ப மேலாளர்கள் (IT managers) போன்ற சில பதவிகளுக்கான சம்பள சலுகைகள் மாதத்திற்கு 17,000 ரிங்கிட் வரை எட்டுகின்றன.
ஆகவே பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெர்கேசோ கேட்டுக் கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 10:34 pm
கிள்ளானில் திடீர் வெள்ளம்: 7 குடும்பங்களை மீட்க, தீயணைப்பு வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றனர்
September 30, 2026, 10:33 pm
பாசிர் கூடாங்கில் போலிசார் லோரியைத் துரத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
September 30, 2026, 10:31 pm
எம்ஏஎம் நேர்மைக் குழுவிற்கு அயோப் கான், சுஹாய்லி நியமனம்
September 30, 2026, 10:30 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி பொதுப் பேரவையின் உற்சாகமும் பரபரப்பும் இன்னும் உணரப்படுகின்றன: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 30, 2026, 10:29 pm
டாக்டர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சமர்ப்பணமாக Damoxin ஆன்டிபயாடிக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது: பரமேஸ்வரன்
September 30, 2026, 10:28 pm
உணவு முறைகளுடன் ஊட்டச் சத்துகள் குறித்த விழிப்புணர்வை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும்: டத்தின்ஸ்ரீ தமயந்தி தேவி
September 30, 2026, 4:11 pm
கிள்ளான் லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தை: 130க்கும் மேற்பட்ட கடைகள் பதிவு செய்யப்பட்டன
September 30, 2026, 3:58 pm
நாட்டின் பல மாநிலங்களில் மாலையில் இடியுடன் கூடிய கனமழை, சூரைக்காற்று வீசும்: மெட் மலேசியா எச்சரிக்கை
September 30, 2026, 3:44 pm
