நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏஎம் நேர்மைக் குழுவிற்கு அயோப் கான், சுஹாய்லி நியமனம்

பெட்டாலிங்ஜெயா:

முன்னாள் தேசிய போலிஸ் துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சே, மலேசிய கால்பந்து சங்கத்தின் நேர்மைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கிளானா ஜெயாவில் உள்ள விஸ்மா எப்ஏஎம்மில் நடைபெற்ற, 2025-2029 பதவிக் காலத்திற்கான செயற்குழுவின் ஆறாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இந்த நியமனமும் ஒன்றாகும் என்று அதன் தலைவர் அப்துல் கனி ஹசான் கூறினார்.

சில குழுக்களுக்குத் தலைமை தாங்குவதற்காக செயற்குழுவிற்கு  வெளியே உள்ள நபர்களின் நியமனம், நம்பகத்தன்மை மற்றும் தொடர்புடைய துறையில் உள்ள அனுபவத்தின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் கால்பந்து நிர்வாக அமைப்பின் ஆளுகை வலுப்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

நேர்மைக் குழுவிற்கு, அயோப் கான் தலைவராகவும், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின்  தலைமை இயக்குநர் முகமது சுஹாய்லி முகமது ஜைன் அவரது துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நம்பகத்தன்மை கொண்டவர்கள் இந்தக் குழுவை நிர்வகித்து, எம்ஏஎம்மின் மேலாண்மை, நிர்வாகம் முடிந்தவரை சிறந்த முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset