நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பீடோரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் காயமடைந்தார்

பீடோர்:

பீடோர் சென்ட்ரலில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், துப்பாக்கிகளுடன் வந்த இரண்டு நபர்களால் சுடப்பட்டதில், உள்ளூர்வாசி ஒருவர் இடது தோள்பட்டையில் காயமடைந்தார்.

வெள்ளை நிற டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தை ஓட்டி வந்த 41 வயதான பாதிக்கப்பட்டவர் பெட்ரோல் நிரப்புவதற்காக நிலையத்திற்குச் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மாலை 6.08 மணிக்கு இந்தச் சம்பவத்தில் அவர் காயமடைந்தார் என்று பேரா போலிஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி தெரிவித்தார்.

பீடோர் நகர் திசையிலிருந்து வந்த ஒரு கருப்பு ஹோண்டா சிட்டி கார், பாதிக்கப்பட்டவரின் வாகனத்திற்கு முன்னால் நின்றது.

அப்போது துப்பாக்கிகளுடன் இருந்ததாக நம்பப்படும் இரண்டு நபர்கள் காரிலிருந்து இறங்கி பாதிக்கப்பட்டவரின் வாகனத்தை நோக்கி பலமுறை சுட்டனர்.

அதன் பின்  அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் கூறினார்.

சம்பவம் நடந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் வாகனத்தில் ஐந்து நபர்கள் இருந்தனர்.
இருப்பினும், அவர்களில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

இடது தோள்பட்டையில் ஒற்றைத் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் பாதிக்கப்பட்டவர், ஆரம்பக்கட்ட சிகிச்சைக்காக தபா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக முகமது அல்வி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset