செய்திகள் மலேசியா
கிள்ளான் லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தை: 130க்கும் மேற்பட்ட கடைகள் பதிவு செய்யப்பட்டன
கிள்ளான்:
கிள்ளான் லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 130-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் தீபாவளி சந்தைக்கான பதிவை அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டுள்ளனர்.
LORONG TINGKAT மற்றும் JALAN TENGKU KELANA ஆகிய பகுதிகளில் இந்த வண்ணமயமான கலாச்சாரச் சந்தை கோலாகலமாக நடைபெற உள்ளது.
கிள்ளான் அரச நகரமன்றத்தின் உரிமத்துறை இயக்குநர் முகமது இசாத் மொக்தார், 142 வர்த்தக இடங்களை வழங்கியதாகவும் அதில் 132 இடங்களுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த இரு வார காலச் சந்தையானது அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை பொதுமக்களுக்காக இயங்கவுள்ளது என்று அவர் சொன்னார்.
பதிவு செய்துள்ள வர்த்தகர்களில் 74 பேர் பண்டிகை தேவைகளுக்கான பொருட்களையும், 20 பேர் பட்டாசுகளையும் விற்பனை செய்யவுள்ளனர். மேலும், 19 பேர் பலூன்கள் மற்றும் மருதாணி வரையும் தொழிலிலும் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாலான் தெங்கு கெலானா வணிகப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த இடம், வெளியூர் கூட்டத்தை ஈர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாலான் தெங்கு கெலானா மற்றும் லோரோங் திங்காட் பகுதி கடை உரிமையாளர்கள் தங்கள் பொருட்களை ஐந்து அடி நடைபாதையில் காட்சிப்படுத்தலாம். இதற்கு நகராட்சியின் அனுமதியுடன் தினமும் ரிம 10 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 10:34 pm
கிள்ளானில் திடீர் வெள்ளம்: 7 குடும்பங்களை மீட்க, தீயணைப்பு வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றனர்
September 30, 2026, 10:33 pm
பாசிர் கூடாங்கில் போலிசார் லோரியைத் துரத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
September 30, 2026, 10:32 pm
தேசிய பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 8,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்
September 30, 2026, 10:31 pm
எம்ஏஎம் நேர்மைக் குழுவிற்கு அயோப் கான், சுஹாய்லி நியமனம்
September 30, 2026, 10:30 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி பொதுப் பேரவையின் உற்சாகமும் பரபரப்பும் இன்னும் உணரப்படுகின்றன: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 30, 2026, 10:29 pm
டாக்டர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சமர்ப்பணமாக Damoxin ஆன்டிபயாடிக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது: பரமேஸ்வரன்
September 30, 2026, 10:28 pm
உணவு முறைகளுடன் ஊட்டச் சத்துகள் குறித்த விழிப்புணர்வை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும்: டத்தின்ஸ்ரீ தமயந்தி தேவி
September 30, 2026, 3:58 pm
நாட்டின் பல மாநிலங்களில் மாலையில் இடியுடன் கூடிய கனமழை, சூரைக்காற்று வீசும்: மெட் மலேசியா எச்சரிக்கை
September 30, 2026, 3:44 pm
