செய்திகள் மலேசியா
தாமான் ஶ்ரீ மூடா குடியிருப்பாளர்களின் வழக்கு: மாநில சட்ட ஆலோசகரின் பார்வைக்கு மந்திரி பெசார் காத்திருப்பு
ஷா ஆலாம்:
வெள்ளம் தொடர்பாக தாமான் ஶ்ரீ மூடா குடியிருப்பாளர்களுக்கு உயர்நீதிமன்றம் அளித்த சாதகமான தீர்ப்பைத் தொடர்ந்து மாநில சட்ட ஆலோசகரின் கருத்துகளைச் சிலாங்கூர் மாநில அரசு பெறும்
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளையும், மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இது உயர் நீதிமன்றத்தின் ஆரம்ப கட்ட தீர்ப்பு மட்டுமே என்பதால், முறையான நியாயத்தை வழங்க மேல்முறையீடு செய்ய இன்னும் அவகாசம் உள்ளது. 2021 பெரும் வெள்ளத்திற்குப் பிறகு, மாநில அரசு மேற்கொண்ட தணிப்பு நடவடிக்கைகளால் இப்பகுதியில் வெள்ள நிலைமை சாதகமாக மேம்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதியில் வெள்ள பாதிப்புகள் மிகக் குறைந்த அளவாகவே பதிவாகியுள்ளன. கிள்ளான் நதியை ஆழப்படுத்தும் 'dredging' பணிகள் அங்கு மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆழப்படுத்தும் பணிகளுக்குப் பிறகு கிள்ளான் நதியின் நீரைத் தாங்கும் திறன் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஸ்ரீ முடா மற்றும் ஜாலான் கெபுன் பகுதிகளில் முந்தைய ஆண்டுகளைப் போன்ற கடுமையான வெள்ளப் பெருக்கு இப்போது ஏற்படுவதில்லை.
பம்ப் மற்றும் நீர் வாரம் கதவுகளின் மேலாண்மை முறைகளும் இப்பகுதிகளில் தற்காலத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன. கிள்ளான் நதியை ஆழப்படுத்தும் திட்டத்திற்காக மாநில அரசு இதுவரை 30 முதல் 40 மில்லியன் ரிங்கிட் வரை செலவிட்டுள்ளது.
இந்த நதியை ஆழப்படுத்தும் பணிகள் எந்தவித தாமதமின்றி திட்டமிட்ட அட்டவணையின்படி தொடர்ந்து நடந்து வருகின்றன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 10:34 pm
கிள்ளானில் திடீர் வெள்ளம்: 7 குடும்பங்களை மீட்க, தீயணைப்பு வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றனர்
September 30, 2026, 10:33 pm
பாசிர் கூடாங்கில் போலிசார் லோரியைத் துரத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
September 30, 2026, 10:32 pm
தேசிய பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 8,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்
September 30, 2026, 10:31 pm
எம்ஏஎம் நேர்மைக் குழுவிற்கு அயோப் கான், சுஹாய்லி நியமனம்
September 30, 2026, 10:30 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி பொதுப் பேரவையின் உற்சாகமும் பரபரப்பும் இன்னும் உணரப்படுகின்றன: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 30, 2026, 10:29 pm
டாக்டர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சமர்ப்பணமாக Damoxin ஆன்டிபயாடிக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது: பரமேஸ்வரன்
September 30, 2026, 10:28 pm
உணவு முறைகளுடன் ஊட்டச் சத்துகள் குறித்த விழிப்புணர்வை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும்: டத்தின்ஸ்ரீ தமயந்தி தேவி
September 30, 2026, 4:11 pm
கிள்ளான் லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தை: 130க்கும் மேற்பட்ட கடைகள் பதிவு செய்யப்பட்டன
September 30, 2026, 3:58 pm
