செய்திகள் மலேசியா
நாட்டின் பல மாநிலங்களில் மாலையில் இடியுடன் கூடிய கனமழை, சூரைக்காற்று வீசும்: மெட் மலேசியா எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா:
நாட்டிலுள்ள பல மாநிலங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த சூரைக்காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக், உலு சிலாங்கூர், சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்படலாம்
மேலும், கெடா மாநிலத்தில் லங்காவி, யான், கோலா மூடா, பந்தர் பாரு, கூலிம், சிக் மற்றும் முழு பினாங்கு தீபகற்பப் பகுதியும் இதன் கீழ் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேராக் மாநிலத்தில் கிரியான், செலமா, லாரூட் மாத்தாங், கோலா கங்சார், மஞ்சோங், பேராக் தெங்கா, கிந்தா, காம்பார் மற்றும் பத்தாங் பாடாங் போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்படலாம்.
பகாங் மாநிலத்தில் கேமரன் ஹைலண்ட்ஸ், ஜெராண்டுட், குவாந்தான், மற்றும் மாரான் ஆகிய முக்கிய இடங்கள் கடுமையான வானிலை மாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.
ஜோகூர் மாநிலத்தில் மெர்சிங், குளுவாங், குலாய், கோத்தா திங்கி, பொந்தியான் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகள் இதில் அடங்கும்.
இந்தத் தகவல்களை மலேசிய வானிலை ஆய்வுத் துறை இன்று மதியம் 12.50 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின் வாயிலாகத் உறுதிப்படுத்தியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 10:34 pm
கிள்ளானில் திடீர் வெள்ளம்: 7 குடும்பங்களை மீட்க, தீயணைப்பு வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றனர்
September 30, 2026, 10:33 pm
பாசிர் கூடாங்கில் போலிசார் லோரியைத் துரத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
September 30, 2026, 10:32 pm
தேசிய பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 8,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்
September 30, 2026, 10:31 pm
எம்ஏஎம் நேர்மைக் குழுவிற்கு அயோப் கான், சுஹாய்லி நியமனம்
September 30, 2026, 10:30 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி பொதுப் பேரவையின் உற்சாகமும் பரபரப்பும் இன்னும் உணரப்படுகின்றன: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 30, 2026, 10:29 pm
டாக்டர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சமர்ப்பணமாக Damoxin ஆன்டிபயாடிக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது: பரமேஸ்வரன்
September 30, 2026, 10:28 pm
உணவு முறைகளுடன் ஊட்டச் சத்துகள் குறித்த விழிப்புணர்வை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும்: டத்தின்ஸ்ரீ தமயந்தி தேவி
September 30, 2026, 4:11 pm
கிள்ளான் லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தை: 130க்கும் மேற்பட்ட கடைகள் பதிவு செய்யப்பட்டன
September 30, 2026, 3:44 pm
