நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

முன்னாள் ஹரிமாவ் மலாயா காற்பந்து பயிற்றுநர் கே.இராஜகோபாலின் தன்முனைப்பு உரை: ஞாயிற்றுக்கிழமை பத்துகாஜாவில் நடைபெறவுள்ளது 

பத்து காஜா: 

ஹரிமாவ் மலாயா அணியின் முன்னாள் பயிற்றுநர் கே. இராஜகோபால் அவர்களின் தன்முனைப்பு கருத்தரங்கம் ஜாலான் செமாராக் அப்பி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருத்தல வளாகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. 

மலேசிய காற்பந்து வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்ச்சிக்கு மலேசியாவின் பிரபல முன்னாள் தேசிய கால்பந்து பயிற்சியாளர் ராஜகோபால் வருகை தந்து சிறப்புரையாற்றுகிறார்.

"கால்பந்து துறையில் வெற்றிக்கான கனவு" (Mimpi Ke Kejayaan Dalam Bidang Bola Sepak) என்ற தலைப்பில் இந்த ஊக்க உரை வழங்கப்படவுள்ளது.

உள்ளூர் காற்பந்து வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்திலும் இந்த உரை அமையும் என ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பான நிகழ்வை கெலப் போலா செபாக் பெര്‍காசா பெம்பான் (Kelab Bola Sepak Perkasa Bemban) மற்றும் கெலப் ரெக்ரியாசி செமெர்லாங் சங்காட் பேத்து காajah (Kelab Rekreasi Cemerlang Changkat Batu Gajah) ஆகிய அமைப்புகள் இணைந்து கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.

மேலும், இப்பகுதி சமூக நலனை முன்னிறுத்தும் பல்வேறு அமைப்புகளும் இதற்கு ஆதரவு நல்கியுள்ளன.

மலேசியாவின் சாதனைமிக்க பயிற்சியாளராக அறியப்படும் டத்தோ கே. இராஜகோபால் அவர்கள், தனது அனுபவங்களை இளம் விளையாட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.

குறிப்பாக, மாநில மற்றும் தேசிய அளவில் சாதிக்க விரும்பும் இளம் வீரர்களுக்கு இந்த உரை ஒரு திருப்புமுனையாக அமையும் என நம்பப்படுகிறது.

அனைத்து கால்பந்து விளையாட்டு வீரர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset