நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி

அன்காரா:

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

இல்டிஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் துருக்கி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிரான்ஸ் அணியின் வெற்றி கோலை கிளையன் எம்பாப்பே அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சுவீடன் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ருமேனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

உக்ரைன் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset