நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்திற்கு குறிவைக்கும் ஷாமலாராணி

டோயோஹாஷி:

ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்திற்கு ஷாமலாராணி குறிவைத்துள்ளார்.

ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவு கராத்தே குமித்தே போட்டியின் இறுதிப் போட்டியில், தனக்குத் தகுதியான தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம், தேசிய கராத்தே வீராங்கனை சி. ஷாமலாரானி உலக அரங்கில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

டோயோஹாஷி ஜிம்னாசியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், போட்டி 0-0 என சமநிலையில் இருந்த நிலையில், ஹாங்காங் பிரதிநிதியான சாங் யீ டிங்கை ஹான்டெய் (நடுவரின் முடிவு) மூலம் தோற்கடித்து, ஷாமலாரானி தனது முதிர்ச்சியையும் அனுபவத்தையும் வெளிப்படுத்தினார்.

இறுதிப் போட்டியில் தவறுக்கு இடமில்லை என்பது தனக்குத் தெரியும் என்று மகிழ்ச்சியுடன் ஷாமலா ராணி கூறினார்.

இந்தப் பயணம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. ஆனால் நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் தருணத்தை நான் அனுபவிக்க விரும்புகிறேன். 

இந்த நிலையை அடைய இது ஒரு கடினமான பயணமாக இருந்தது.

என் தோள்களில் ஒரு பெரிய பொறுப்பை உணர்கிறேன்.

மலேசியாவிற்காக இந்தத் தங்கத்தை வெல்ல முடிந்ததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். 

இந்தத் தருணத்திற்காக நான் நீண்ட காலமாக காத்திருந்தேன் என்று அவர் கூறினார்.

ஏற்கெனவே மூன்று தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற 27 வயதான இந்த வீராங்கனை, தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன் பட்டத்தையும் தனது சேகரத்தில் சேர்த்துள்ளார்.

இதற்குப் பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சி செய்வீர்களா என்று கேட்டபோது, ​​'நிச்சயமாக' என்பதே அவரது எளிமையான பதிலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset