நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்

பிரேசிலியா:

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரோபர்டோ கார்லோஸ், தனது முன்னாள் முகவர், ஒரு குடும்ப உறுப்பினர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காரணமாக, தனது விளையாட்டு வாழ்க்கையில் ஈட்டிய 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

2002 உலகக் கிண்ண பிரேசில் வெல்ல உதவிய முன்னாள் இடது-பக்க தடுப்பாட்ட வீரரான அவர், தன்னிடம் இருந்து அனைத்தையும் பறிக்கவிருந்த ஆவணங்களைப் பெற்ற பிறகு, எப்படி மீண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதைத் தெரிவித்துள்ளார்.

மக்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் என்னிடம் இருந்த பணம் முழுவதும் இல்லாமல் போனது என்று போர்த்துகல் கால்பந்து மாநாட்டில் அவர் கூறியதாக குளோபோ தெரிவித்துள்ளது.

முகவர்கள், குடும்பத்தினருடனான பிரச்சனைகளால், கால்பந்தில் நான் சம்பாதித்த அனைத்திலும் 99 சதவீதத்தை இழந்தேன்.

நான் தவறுகள் செய்தேன், அதனால்தான் இளம் வீரர்கள் அதே தவறுகளைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வியாழக்கிழமை இரவு தாமதமாக உறங்கச் சென்றேன், வெள்ளிக்கிழமை, அப்படி ஒன்று இருப்பதே எனக்குத் தெரியாத பல ஆவணங்கள் எனக்குக் கிடைத்தன. 

அப்போதுதான் என் தொழில் வாழ்க்கை முழுவதும் நான் உருவாக்கிய அனைத்தையும் இழந்தேன்.

கார்லோஸ் தனது 15 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2025இல் தன் மனைவியை விவாகரத்து செய்தார். 

இந்த நடவடிக்கை, அவர் தற்போது கிளப் தூதராகப் பணியாற்றும் ரியல் மாட்ரிட்டின் பயிற்சி மைதானத்தில் வசித்து வருவதாக செய்திகளைத் தூண்டியது.

இருப்பினும், அவர்  எக்ஸ் வழியாக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

சமீப நாட்களாக, நான் எங்கே இருக்கிறேன் என்பது பற்றிய ஆதாரமற்ற வதந்திகளைப் பார்த்திருக்கிறேன் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset