நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவும் நேப்பாளமும் தொழிலாளர்கள் நடைமுறையை வலுப்படுத்தி, ஊழலைக் கட்டுப்படுத்தும்: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

மலேசியாவும் நேப்பாளமும் தொழிலாளர்கள் நடைமுறையை வலுப்படுத்தி, ஊழலைக் கட்டுப்படுத்தும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

மேலும் ஒழுங்கான, வெளிப்படையான மற்றும் நேர்மை அடிப்படையிலான செயல்முறையை உறுதி செய்வதற்கும், தொழிலாளர் வளங்களைச் சுரண்டுவதற்கு வழிவகுக்கும் நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆள்சேர்ப்பு முறையைச் சீரமைக்க மலேசியாவும் நேபாளமும் ஒப்புக்கொண்டுள்ளன.

நேபாளத்தின் இளைஞர், தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராம்ஜி யாதவுடன் தொலைபேசியில் உரையாடியபோது இந்த உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டது. 

மேலஅறிந்திருப்பதாக  வேலைவாய்ப்புத் துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர் பேசினார்.

குறிப்பாக ஒழுங்கான, வெளிப்படையான தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும், தொழிலாளர்கள் அதிகப்படியான செலவுகளைச் சந்திக்க நேரிடுவதையோ அல்லது சுரண்டல், பொறுப்பற்ற இடைத்தரகர்களுக்கு ஆளாவதையோ ஏற்படுத்தக்கூடிய நடைமுறைகளைக் களைவதன் அவசியத்தையும் இரு தரப்பினரும் அறிந்திருப்பதாக டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

நாட்டின் தொழில்துறை, தொழிலாளர் சந்தையின் உண்மையான தேவைகளைப் புறக்கணிக்காமல், நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், தொழிலாளர் பாதுகாப்பு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மேலாண்மை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதில் மலேசியா உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset