செய்திகள் மலேசியா
என் இனிய நண்பர் இத்ருஸ் இப்ராஹிம் இழந்துவிட்டேன்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
மலேசியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, எனது சகோதரர் இத்ருஸ் இப்ராஹிம் காலமானார் என்ற துயரச் செய்தியை அறிந்தேன். அவருக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறினார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
வாழ்க்கையின் பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஒருவர் திடீரென நம்மை விட்டுப் பிரியும் அந்த இழப்புணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது; இந்த எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் என் மனம் சுமக்கும் பாரத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் மட்டுமே அறிவான்.
அவரது இறுதித் தருணங்களில் அவருடன் இருக்க முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது; ஆயினும், ஒருபோதும் நாம் தயாராக இருக்க முடியாத அந்தப் பிரிவை ஏற்றுக்கொள்ள என் மனம் போராடினாலும், இறைவனின் முடிவை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.
நீங்கள் விட்டுச் சென்ற அனைத்து நினைவுகளுக்கும் அன்புக்கும் நன்றி; அவை என்றென்றும் எங்கள் இதயங்களிலும் மனங்களிலும் நிலைத்திருக்கும்.
மறைந்த இத்ருஸ் இப்ராஹிம் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது குறைகளை மன்னித்து, அவரது ஆன்மாவின் மீது கருணை பொழிந்து, நற்செயல்கள் புரிந்த அவனது நம்பிக்கையுள்ள அடியார்களில் ஒருவராக அவரைச் சேர்த்தருள்வானாக என்று பிரதமர் தனது முக நூல் பதிவில் கூறியுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 24, 2026, 8:04 pm
இத்தாலியில் நடைபெறும் HIPPO ஆங்கில மொழிப் போட்டியில் பங்கேற்க ரோஷனுக்கு கைகொடுத்தார் டத்தோஸ்ரீ சரவணன்
September 24, 2026, 11:56 am
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான அரசியல் ஒத்துழைப்பை தேசிய முன்னணி விரைவில் அறிவிக்கும்: ஜம்ரி
September 24, 2026, 11:30 am
சரவாக் செரியானில் IPU மிக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 24, 2026, 11:22 am
ஈப்போ பெரிய சந்தையின் கட்டிடத்திலிருந்து ஆடவர் விழுந்து உயிரிழப்பு
September 24, 2026, 11:00 am
ரோஹிங்கியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கும் திட்டத்தை ஜேபிஜே மறுத்தது
September 24, 2026, 10:58 am
ரயில் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறால் கிளானா ஜெயா எல்ஆர்டி ரயில் சேவை தாமதம்
September 24, 2026, 10:57 am
ஆர்ஓஎஸ் முடிவை எதிர்த்து தேசியக் கூட்டணி சட்ட நடவடிக்கை எடுக்கும்: தக்கியூடின்
September 24, 2026, 10:56 am
