நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இத்தாலியில் நடைபெறும் HIPPO ஆங்கில மொழிப் போட்டியில் பங்கேற்க ரோஷனுக்கு கைகொடுத்தார் டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

இத்தாலியில் நடைபெறும் HIPPO ஆங்கில மொழிப் போட்டியில் பங்கேற்க ரோஷனுக்கு மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கைகொடுத்தார்.

அனைத்துலக HIPPO ஆங்கில மொழிப் போட்டி இத்தாலியில் வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் ரோஷன் சந்திரசேகர் மலேசியாவைச் பிரதிநிதித்து பங்கேற்கவுள்ளார்.

பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி மாணவரான ரோஷன் இப் போட்டியில் பங்கேற்பதில் நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கினார்.

இதனால் ரோஷன் இப் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் ரோஷனை நேரடியாக சந்தித்ததுடன் அவரின் கனவுக்கும் துணை நின்றார்.

குறிப்பாக ரோஷன் இத்தாலிக்கு செல்வதற்கு நிதியுதவியும் அவர் வழங்கினார்.

மேலும் ரோஷன் போன்ற மாணவர்கள் மலேசியாவின்  அடையாளமாக விளங்குகிறார்.

ஆகையால் ரோஷன் தனது இலக்கை அடைய நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

ரோஷனின் வெற்றியும் சாதனையும் தமிழ்ப்பள்ளிக்கும் இந்நாட்டிற்கும் பெருமையை சேர்க்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக ரோஷன் இப்போட்டியில் பங்கேற்று வருகிறார்.

இத்தாலியில் நடைபெறும் இப்போட்டி ரோஷனுக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும்.

இப்போட்டியில் பங்கேற்க ரோஷனுக்கு உதவிய டத்தோஸ்ரீ சரவணனுக்கு எனது நன்றி என அவரின் தந்தை சந்திரசேகர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset