நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதிவை ரத்து செய்வது தொடர்பாக ஆர்ஓஎஸ் தேசியக் கூட்டணிக்கு கடிதம் அனுப்பியது

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணியின் முக்கியத் தலைவர்களுக்கு, கூட்டணி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதைத் தெரிவித்து, ஆர்ஓஎஸ் ஒரு கடிதத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கடிதம், தேசியக் கூட்டணி தலைவர்களான தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார், பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் ஆகியோருக்கு நேற்று அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்க தேசியக் கூட்டணி தலைவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின் பெயரில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கப் பதிவகம் அவர்களுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset