நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது மன்னிப்பு விவகாரத்தில் இரட்டை நிலைபாடு வேண்டாம்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

பொது மன்னிப்பு விவகாரத்தில் இரட்டை நிலைபாடு வேண்டாம் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் வலியுறுத்தினார்.

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் விவகாரத்தை அரசியலமைப்புச் சட்டம், சட்டத்தின் ஆட்சி எனும் கோட்பாடு, மாமன்னரால் உண்மையில் வழங்கப்பட்டுள்ள மன்னிக்கும் அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.

விளக்கத்தில் உள்ள இரட்டை நிலைப்பாடுதான் விசித்திரமானது.

முடிவு சாதகமாக இருக்கும்போது சட்டத்தின் ஆட்சி. அதுவே  சாதகமாக இல்லாதபோது  விளக்கம் வேண்டும் என திரிக்கப்படுகிறது.

சட்டம் என்பது ஒரு அரசியல் மெனு அல்ல.

இதில் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக, இன்று ஒரு விதமாகவும், நாளை மற்றொரு விதமாகவும் நீங்கள் அதை விளக்க முடியாது.

அது ஒரு பொதுமன்னிப்பு என்றால், அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அது நிபந்தனைக்குட்பட்டது என்றால், நிபந்தனைகளைக் குறிப்பிடுங்கள். சட்டத்தின் விளக்கத்தை ஒரு அரசியல் கருவியாக மாற்றாதீர்கள்.

பொதுமன்னிப்பு என்பது பொதுமன்னிப்புதான்.  இரட்டை நிலைப்பாடு வேண்டாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset