நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மானியமில்லா ரோன் 97, ரோன் 95 விலை 20 சென் உயர்வு: டீசல் விலை 15 சென் உயர்வு

புத்ராஜெயா:

மானியம் இல்லாத ரோன் 97, ரோன் 95 ஆகியவற்றின் விலை நாளை முதல் 20 சென் உயரும்.

மானியம் இல்லாத ரோன் 97, ரோன் 95 ஆகியவற்றின் விலை முறையே ஒரு லிட்டருக்கு 5.05 ரிங்கிட், 4.57 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மானியம் இல்லாத டீசலின் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 5.42 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 15 சென் உயர்வாகும்.

பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 ஒரு லிட்டர் 1.99 ரிங்கிட் என்ற விலையில் தொடர்ந்து விற்கப்படும்.

அதே சமயம் பூடி டீசல் முன்முயற்சியின் கீழ் டீசல் ஒரு லிட்டர் 2.10 ரிங்கிட் என்ற விலையில் தொடர்கிறது.

மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் பெட்ரோலின் விலை ஒரு லிட்டர் 2.05 ரிங்கிட்டாகவும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின்.கீழ் மானிய விலையில் வழங்கப்படும் டீசலின் விலை ஒரு லிட்டர் 2.15 ரிங்கிட்டாகவும் உள்ளது.

இந்த விலைகள் அனைத்தும் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என நிதியமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset