நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் நெருக்கடி மாநில அரசியலமைப்பிற்குத் திரும்ப வேண்டும்: அஸாலினா

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலானில் நிலவும் நெருக்கடியை, நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு, நிறுவப்பட்ட அரசியலமைப்புச் செயல்முறையின் அடிப்படையில் பார்க்க வேண்டும்,

 பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்தம் அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சயித் கூறினார்.

இந்த நெருக்கடி தொடர்பாக அவர் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்க விரும்பவில்லை.

மாறாக, மாநில ஆட்சியின் அடிப்படையான சட்டத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொரு முடிவும் எடுக்கப்பட வேண்டும்.

நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்க விரும்பவில்லை. ஒருவர் சொல்வது சரி, ஒருவர் சொல்வது தவறு.

ஆனால் என்னைப் பொறுத்தவரை, எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் அல்லது விஷயமும், மாநில அரசியலமைப்பு எனும் பிரதான சட்டத்திற்கே திரும்ப வேண்டும்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நெகிரி செம்பிலான் சற்று தனித்துவமானது.

நாங்கள் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றால், நாங்கள் கருத்துத் தெரிவிப்பது சற்று நியாயமற்றது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset