நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகாரளித்து, ஊழலை நிராகரியுங்கள்: 652 அரசு ஊழியர்களுக்கு 1.18 மில்லியன் ரிங்கிட் வெகுமதி

புத்ராஜெயா:

2012 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், இலஞ்சம் கொடுப்பது அல்லது பெறுவது குறித்துப் புகாரளிக்க முன்வந்த 652 அரசு ஊழியர்களுக்கு, அரசாங்கம் மொத்தம் 1.18 மில்லியன் ரிங்கிட் வெகுமதியை வழங்கியுள்ளது.

ஊழலை எதிர்த்துப் போராட உதவிய அவர்களின் துணிச்சலைப் பாராட்டும் விதமாக இந்த வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ அப்துல் ஹலீம் அமான், இந்தக் காலகட்டத்தில் நான்கு முக்கிய முகமைகள் அதிக எண்ணிக்கையிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் போலிஸ்படையில் 437 பேர், மலேசிய குடிவரவுத் துறையில் 64 பேர், மலேசிய கடல்சார் அமலாக்க முகமை 33 பேர், உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு 21 பேர் என இந்த வெகுமதியை பெற்றுள்ளனர்.

பெர்லிஸில் 1.8 டன் ஷாபு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலிஸ் அதிகாரி ஒருவர் 200,000 ரிங்கிட்  மதிப்புள்ள லஞ்சத்தை நிராகரித்ததும், ஜொகூரில் 45,000 ரிங்கிட் லஞ்சம் நிராகரிக்கப்பட்டதும் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கிய வழிகளில் அடங்கும் என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset