செய்திகள் மலேசியா
போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்த மலேசியாவும் சீனாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
பெய்ஜிங்:
தரைவழி, ரயில், கடல்வழி, வான்வழிப் போக்குவரத்து, அத்துடன் சரக்குப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய இருதரப்பு ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை நிறுவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியாவும் சீனாவும் கையெழுத்திட்டன.
தொழில்நுட்ப நிபுணத்துவப் பரிமாற்றம், திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, பசுமைப் போக்குவரத்து, குறைந்த கார்பன் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை இதில் கவனம் செலுத்தப்படும் முக்கியத் துறைகளில் அடங்கும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
நேற்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர் அந்தோனி லோக் சியூ , அவரது சீனப் பிரதிநிதி லியு வெய் ஆகியோரால் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்தச் சந்திப்பில், போக்குவரத்துத் துறையில் மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், தத்தமது போக்குவரத்து அமைப்புகளின் இணைப்பு, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்குமான முயற்சிகள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்த ஒத்துழைப்பு, கொள்கை வகுப்பதில் மலேசியாவின் திறனை மேம்படுத்தவும், விநியோகச் சங்கிலி செயல்திறனை வலுப்படுத்தவும், சீனத் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்கவும், ஆசியான் பிராந்தியப் போக்குவரத்து மையமாக மலேசியாவின் பங்கை மேலும் வலுப்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கை தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 11:51 am
புகாரளித்து, ஊழலை நிராகரியுங்கள்: 652 அரசு ஊழியர்களுக்கு 1.18 மில்லியன் ரிங்கிட் வெகுமதி
September 23, 2026, 11:48 am
சரவாக்கில் 13 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தும் குறியீடு பதிவாகியுள்ளது
September 23, 2026, 11:46 am
அந்தோனி லோக்கின் அதிகாரப்பூர்வ சீனப் பயணம் குறித்து ஃபத்லி கேள்வி எழுப்புகிறார்
September 23, 2026, 10:24 am
ஐ.நா.வின் முக்கியத்துவம், வலுவான பன்முகத்தன்மைக்கு மலேசியா அழுத்தம் கொடுக்க உள்ளது
September 23, 2026, 10:21 am
பத்து பகாட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள்: புத்ராஜயா, கோலாலம்பூர் உட்பட 4 மாநிலங்களில் உணரப்பட்டன
September 22, 2026, 11:07 pm
நெகிரி செம்பிலான் விவகாரங்களில் தலையிட வேண்டாம்: பிரதமருக்கும், சட்டத்துறைத் தலைவருக்கும் எச்சரிக்கை
September 22, 2026, 11:04 pm
