செய்திகள் மலேசியா
சரவாக்கில் 13 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தும் குறியீடு பதிவாகியுள்ளது
கூச்சிங்:
இன்று காலை நிலவரப்படி, சரவாக்கில் மொத்தம் 13 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தும் குறியீடு (ஏபிஐ) அளவுகள் பதிவாகியுள்ளன.
இதில் ஸ்ரீ அமான், செரியான் ஆகிய பகுதிகளில் மிக உயர்ந்த அளவாக 180 பதிவாகியுள்ளது.
மலேசிய காற்று மாசுபடுத்தும் குறியீடு மேலாண்மை அமைப்பு இணையதளத்தின் தரவுகளின்படி, ஆரோக்கியமற்ற அளவுகளைப் பதிவுசெய்த மற்ற பகுதிகள் கூச்சிங் (175), சிபு (171), சரிகேய் (169), பிந்துலு (169) மற்றும் சமரஹான் (169) ஆகும்.
முகா (161), மிரி (159), சமலாஜு (159), மிரி தொழிற்பயிற்சி நிறுவனம் (156), லிம்பாங் (153) மற்றும் கபிட் (118) ஆகிய இடங்களிலும் ஆரோக்கியமற்ற API அளவுகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள மற்ற 45 பகுதிகளில் மிதமான அளவுகளும், எட்டுப் பகுதிகளில் நல்ல அளவுகளும் பதிவாகியுள்ளன.
ஏபிஐ அளவீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை நல்ல காற்றின் தரத்தையும், 51 முதல் 100 வரை மிதமான தரத்தையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற தரத்தையும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற தரத்தையும் குறிக்கிறது.
மேலும், 300-க்கு மேற்பட்ட ஏபிஐ அளவீடு அபாயகரமான நிலைகளைக் குறிக்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 11:51 am
புகாரளித்து, ஊழலை நிராகரியுங்கள்: 652 அரசு ஊழியர்களுக்கு 1.18 மில்லியன் ரிங்கிட் வெகுமதி
September 23, 2026, 11:49 am
போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்த மலேசியாவும் சீனாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
September 23, 2026, 11:46 am
அந்தோனி லோக்கின் அதிகாரப்பூர்வ சீனப் பயணம் குறித்து ஃபத்லி கேள்வி எழுப்புகிறார்
September 23, 2026, 10:24 am
ஐ.நா.வின் முக்கியத்துவம், வலுவான பன்முகத்தன்மைக்கு மலேசியா அழுத்தம் கொடுக்க உள்ளது
September 23, 2026, 10:21 am
பத்து பகாட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள்: புத்ராஜயா, கோலாலம்பூர் உட்பட 4 மாநிலங்களில் உணரப்பட்டன
September 22, 2026, 11:07 pm
நெகிரி செம்பிலான் விவகாரங்களில் தலையிட வேண்டாம்: பிரதமருக்கும், சட்டத்துறைத் தலைவருக்கும் எச்சரிக்கை
September 22, 2026, 11:04 pm
