நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்

தருமபுரி:

தருமபுரி அருகே கனமழை காரணமாக குன்றிலிருந்து சரிந்த பாறை நாகர்கோவில் - பெங்களூர் ரயில் மீது மோதியது. லேசான அளவில் சேதம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கிப் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை சேலத்தைக் கடந்து தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி மற்றும் சிவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அதிகாலை பெய்த கனமழை காரணமாக கடுமையான மண்ணரிப்பு ஏற்பட்டு, அருகில் இருந்த குன்றிலிருந்து பாறை ஒன்று உருண்டு தண்டவாளத்தில் விழுந்தது. மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலின் முன்பக்க பயணிகள் பெட்டியின் சக்கரப் பகுதிக்கு அருகே இருந்த ஷாக் அப்சார்பர் மீது பாறை பலமாக மோதியதில் அப்பாகம் பழுதடைந்தது.

சோதித்து பார்த்ததில் ரயிலை மெதுவாக செலுத்திச் செல்ல முடியும் என்று பழுதுபார்த்தவர்கள் சொன்னதன்பின் ரயில் பாதுகாப்பாக தருமபுரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பயணிகளுக்கு எந்தவித பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset