நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி

சென்னை: 

மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தலில் வேட்புமனுத் தாக்​கல் நிறைவடைந்தது. இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

தமிழகத்​தில் மது​ராந்​தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகு​தி​களுக்கு அக்​டோபர் 6-ஆம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்​கி இன்றுடன் நிறைவடைந்தது.

இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. 

மது​ராந்​தகம் தொகு​தி​யில் வேட்​பாளர்​கள் மரகதம் குமர​வேல் (தவெக), பரந்​தாமன் (தி​முக), கணிதா சம்பத் (அதிமுக), ஜானகி​ராமன் (நாம் தமிழர்), பி.சுகந்தி (சிபிஎம்) ஆகியோர் மனுத்​தாக்​கல் செய்​துள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (தவெக), சுகன்யா ( திமுக), பானுமதி (அதிமுக), கார்த்திகா ( நாதக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து வேட்​புமனுக்​கள் மீதான பரிசீலனை நாளை (செப்​டம்​பர் 17) நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வேட்பு மனுக்​களை திரும்​பப் பெறு​வதற்​கான அவகாசம் செப்​டம்​பர் 19-ஆம் தேதி வரை வழங்​கப்​பட்​டுள்​ளது. 

அன்று மாலையே இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​படும். இந்​நிலை​யில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவுக்கு முந்​தைய, பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் முடிவு​களை வெளி​யிட​வும், பரப்​ப​வும் தேர்​தல் ஆணை​யம் தடை விதித்​துள்​ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset