நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எர்லிங் ஹாலண்டின் வெற்றி கோலை அனுமதித்த வீடியோ உதவி நடுவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது

லண்டன்:

எர்லிங் ஹாலண்டின் வெற்றி கோலை அனுமதித்த விஏஆர் எனும் வீடியோ உதவி நடுவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில், மென்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆட்டத்தில் எர்லிங் ஹாலண்ட் வெற்றி கோலை அடுத்தார்.

இந்த கோலை  அனுமதித்த வீடியோ உதவி நடுவர் மாட் டோனோஹூ, இந்த வார இறுதியில் நடைபெறும் எந்த பிரீமியர் லீக் போட்டிகளுக்கும் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ஹாலண்டின் கோலை அனுமதித்த முடிவு ஒரு தவறு என்று நடுவர் அமைப்பான புரோ ரெஃப் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, உதவி நடுவர் பிளேக் ஆன்ட்ரோபஸுக்கும் எந்தப் பணியும் வழங்கப்படவில்லை.

இந்த முடிவை தலைமை நடுவர் ஹோவர்ட் வெப் மற்றும் நிர்வாகக் குழுவினர் எடுத்தனர். 

சர்வதேசப் போட்டிகளுக்கான இடைவேளைக்குப் பிறகு இரு அதிகாரிகளும் மீண்டும் பணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டத்தின் பிற்பகுதியில் ஹாலண்ட் அடித்த கோல், முதலில் ஆஃப்சைடு காரணமாக நிராகரிக்கப்பட்டது. 

பின்னர் விஏஆர் நடுவர் அதை மறுபரிசீலனை செய்து, அந்த நார்வே வீரர் ஆஃப்சைடில் இல்லை என்பதை உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset