செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் நீக்கம்: மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமினுடின் கோரிக்கை
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் TUANKU MUHRIZ TUANKU MUNAWIR அவர்கள் YANG DI- PERTUAN BESAR பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை குறித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹருன் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பு சட்டத்தின்படி, மாநிலத்தின் ஆட்சியாளர் பதவி தொடர்பான விவகாரங்களில் முடிவெடுக்கும் எந்தவொரு அதிகாரமும் எக்சோ உறுப்பினர்களுக்குக் கிடையாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் TUANKU MUHRIZஇன் நீக்கம் சட்டப்பூர்வமானது என்றும் TUANKU NADZARUDDIN புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் TUANKU MUHRIZ TUANKU MUNAWIRஐ நீக்க அப்போதைய மந்திரி பெசாரான எனக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் தாம் கையொப்பமிட மறுத்ததாகவும் அதற்கான விளக்கத்தையும் பொதுமக்களிடம் வழங்கியதாக அமினுடின் ஹருன் சொன்னார்.
நேற்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையைத் தாம் எந்தவகையிலும் அங்கீகரிக்கவில்லை என்று அமினுடின் ஹருன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நெகிரி செம்பிலானின் உண்மையான மற்றும் முறையான YANG DI PERTUAN BESAR, TUANKU MUHRIZ TUANKU MUNAWIR என்று அவர் தனது அறிக்கையில் வலுவாக அடித்துக்கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 12:20 pm
இன்னும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே: அப்துல் ரவுஃப்
September 17, 2026, 12:19 pm
பிறையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மீது காவல்துறை விசாரணை
September 17, 2026, 12:19 pm
பாலியில் ஸ்கூபா டைவிங் செய்தபோது மலேசியர் உயிரிழந்தார்
September 17, 2026, 12:18 pm
சபா, சரவாக் தலைவர்களிடமிருந்து நட்பை கற்றுக் கொள்ளுங்கள்: ஜாஹித் முன்னிலையில் அன்வார் கூறினார்
September 17, 2026, 12:17 pm
16ஆவது பொதுத் தேர்தல் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில் நடைபெறலாம்?: மசீச
September 17, 2026, 12:17 pm
நகைக் கடையில் இரண்டாவது முறையாகக் கொள்ளை: 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது
September 17, 2026, 11:36 am
துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சட்டப்பூர்வ ஆட்சியாளர்
September 17, 2026, 11:01 am
சிலாங்கூரில் மோசமடையும் புகைமூட்டம்: பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை பரிசீலிக்கப்படும்
September 17, 2026, 10:51 am
