நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சட்டப்பூர்வ ஆட்சியாளர் 

சிரம்பான்: 

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சட்டப்பூர்வமான YANG DI PERTUAN BESAR, துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் தான் என்று நீதி,சட்டம் மன்றம் (DKU) அறிவித்தது 

தற்போதைக்கு YDPB பதவி காலியிடமாக இல்லை என்றும், அப்பதவி சட்டப்பூர்வமாக வகிக்கப்படும் நிலையில் வேறு வாரிசுக்கு இடமில்லை என்றும் DKU தெரிவித்துள்ளது.

துவாங்கு முஹிரிஸின் பதவி நீக்கத்தை உறுதிப்படுத்தவும் புதிய ஆட்சியாளரை அங்கீகரிக்கவும் முயன்ற செப்டம்பர் 16 தேதியிட்ட மாநில ஆட்சிக்குழுவின் முடிவு எந்தவொரு சட்டப்பூர்வ செல்வாக்கையும் கொண்டிருக்கவில்லை என DKU வலியுறுத்தியது 

அத்தகைய விவகாரங்கள் மாநில ஆட்சிக்குழுவின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை அல்ல என்றும், அவை நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் பிணைப்புத் தீர்மானங்களுக்கு முரணானவை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் தொடர்ந்து சட்டப்பூர்வ YANG DI PERTUAN BESAR, NEGERI SEMBILAN  என்று DKU மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset