நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் மோசமடையும் புகைமூட்டம்: பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை பரிசீலிக்கப்படும் 

ஷா ஆலாம்: 

சிலாங்கூர் மாநிலத்தில் புகைமூட்டம் மோசமடைந்து வருகிறது. புகைமூட்டத்தை எதிர்கொள்ள மாநில அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். 

பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப் பாதிக்கக்கூடிய காற்று pollution-இல் இருந்து பாதுகாக்க சிறப்புத் திட்டங்கள் பரிசீலிக்கப்படும்.

வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்பட்டு முடிவு எட்டப்படும் என்று அவர் தெரிவித்தார். 

தற்போது சிலாங்கூர் முழுவதும் காற்றின் தரம் பெருமளவு மோசமடைந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கியக் கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுமாசு குறியீடு  ஆரோக்கியமற்ற அளவைப் பதிவு செய்துள்ளது.

மலேசிய வளிமண்டலக் குறியீட்டு மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி, ஜொஹான் செத்தியா பகுதியில் மிகக் கடுமையான காற்று மாசுபாடு பதிவாகியுள்ளது. இப்பகுதியில் அதிகபட்சமாக 185 என்ற புள்ளிகளில் அளவு பதிவாகி நிலையை மேலும் கவலைக்கிடமாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஷா ஆலாம்  பகுதியில் 175 புள்ளிகளும், பெட்டாலிங் ஜெயா பகுதியில் 168 புள்ளிகளும் பதிவாகியுள்ளன. மேலும் கிள்ளான், பந்திங், மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களிலும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset