நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப்களில் ஊடுருவி SMS அனுப்பிய ஆடவருக்குச் சிறை

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் முழுவதும் சென்று 10,000 அதிகமான மோசடிக் குறுந்தகவல்களை அனுப்பிய ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த 28 வயது ஒங் காக் சேங் (Ong Kak Seng), காரில் SMS blaster கருவியை வைத்துக்கொண்டு அத்தகைய மோசடிக் குறுந்தகவல்களை அனுப்பினார்.

சட்டவிரோத இணையச் சூதாட்டத்தை விளம்பரத்துக்கு உதவுவதாக நினைத்து, அவர் நாளுக்கு 12 மணிநேரம் வரை காரை ஓட்டி அந்த மோசடியில் ஈடுபட்டார்.

ஆனால் அவர் வைத்திருந்த SMS blaster கருவி, அவர் செல்லும் இடங்களில் தமக்கு அருகில் இருப்போரின் கைத்தொலைபேசிகளுக்கு WhatsApp கணக்குகளை ஊடுருவும் மோசடித் தகவல்களை அனுப்பியது.

அந்த விவரங்களைப் பயன்படுத்தி WhatsApp கணக்குகளை மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

ஓங், கடன் சுமையில் இருந்ததாக தெரியவந்தது. 

ஒங்கிற்கு ஓர் ஆண்டு ஒன்பது மாதச் சிறைத்தண்டனையும் 1,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset