நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து-கம்போடிய எல்லையில் 8.4 கிலோமீட்டர் நீளமான சுவரை அமைக்கும் தாய்லாந்து

சந்தபுரி:

தாய்லாந்து கம்போடியாவுடனான எல்லையில் புதிய சுவரைக் கட்டத் தொடங்கியிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையே சென்ற ஆண்டு மூண்ட போரைத் தொடர்ந்து தாய்லாந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.

புதிய சுவரின் நீளம் 8.4 கிலோமீட்டர். அதன் உயரம் 3.6 மீட்டர்.

ஒரு கிலோமீட்டர் நீளமுடைய பாகம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதன்மேல் கூர்மையான முள்வேலி பொருத்தப்பட்டிருக்கிறது.

எல்லையைத் தாண்டி பொருள்களையும் ஆள்களையும் சட்டவிரோதமாகக் கடத்தும் நடவடிக்கையை முடக்கச் சுவர் கட்டப்படுவதாகத் தாய்லாந்துக் கடற்படைத் தலைவர் கூறினார்.

டிசம்பரில் இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருப்பினும் ஒப்பந்தத்தை மீறியதாகத் தாய்லாந்தும் கம்போடியாவும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுகின்றன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset