நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

4,000க்கும் மேற்பட்ட வங்காளதேச நாட்டவர்களின் விசாக்களைத் திடீரென்று இரத்து செய்தது ஜக்கிய அரபு அமீரகம் 

துபாய்: 

ஐக்கிய அரபு அமீரகம், விடுமுறையில் சொந்த நாட்டுக்குச் சென்ற 4,000-க்கும் மேற்பட்ட பங்களாதேஷ் நாட்டினரின் விசாக்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென ரத்து செய்துள்ளது.

இதனால் அவர்கள் மீண்டும் தங்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்களுக்குத் திரும்ப முடியாமல் சொந்த நாட்டிலேயே பரிதவித்து வருகின்றனர்.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மின்னஞ்சல்கள் அல்லது செல்பேசி குறுஞ்செய்திகள் மூலமாக இந்த விசா ரத்து குறித்த தகவல்கள் வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எத்தகைய குற்றப் பின்னணியும் இல்லாதபோதிலும், எதற்காக விசா ரத்து செய்யப்பட்டது என்பதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ காரணமும் அதில் குறிப்பிடப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய வெளிநாட்டு வாழ் பங்களாதேஷ் நலத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் நூருல் ஹுக் நூரு, தனது அமைச்சகமும் வெளியுறவு அமைச்சகமும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள சுமார் 4,800 பேரின் விசாப் பிரச்சினையைத் தீர்க்க தூதரக வழிமுறைகளின் மூலமாகத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே, டாக்காவில் உள்ள தேசிய பத்திரிகைப் மன்றத்தில் திரண்ட பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர், தங்களுக்கு நீதி கோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்தப் பிரச்சினைக்குச் சுமூகமான தீர்வு காணப்படுவதோடு, அதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதந்தோறும் 15,000 முதல் 20,000 வரை நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset