செய்திகள் உலகம்
சிங்கப்பூர் பிரதமர் வோங் முன்னிலையில் நசீர் கனிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் 85ஆம் ஆண்டு விழாவில் சிங்கப்பூர் பிரதமர் வோங் முன்னிலையில், லீக்கின் தலைவர் ராஜ் முஹம்மது, மூத்த உறுப்பினர் நசீர் கனிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார்.
நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக்கின் 85ஆவது நிறைவு ஆண்டு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது நசீர் கனி கௌரவிக்கப்பட்டார்.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவரும் கல்வியாளருமான நசீர் கனி கல்விக்கும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் ஆற்றிவரும் நீண்டகாலச் சேவையைப் பாராட்டி அந்த விருது வழங்கப்பட்டது.
அமைப்பின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாகத் தொண்டு செய்துவரும் பெண்களும் மூத்த உறுப்பினர்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
நேற்றைய விழாவில் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் இலக்கியப் பங்களிப்பும் புதிய முறையில் எடுத்துக்காட்டப்பட்டது.
கடையநல்லூர் சமூகத்தைச் சேர்ந்த கவிஞர்களின் படைப்புகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாடல்களாக உருவாக்கப்பட்டு மேடையில் படைக்கப்பட்டன.
கலாசாரப் பதக்கம் பெற்ற கவிஞர் க.து.மு. இக்பால் (KTM Iqbal), மூத்த கல்வியாளர் மசூது (Mashuthoo) ஆகியோரின் கவிதைகள் இதில் இடம்பெற்றன.
மசூதுவின் கவிதைகள் தேசியக் கலை மன்றத்தின் 'Poems on the MRT' இயக்கத்திலும் இடம்பெற்றுள்ளன.
அமைப்பின் முன்னாள் தலைவர்களைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் மின்னிலக்க வடிவில் மீண்டும் காட்சிப்படுத்தும் முயற்சியும் இடம்பெற்றது.
இளைய தலைமுறையினருக்கு அமைப்பின் வரலாற்றையும் முன்னோடிகளையும் புதிய முறையில் அறிமுகப்படுத்துவது அதன் நோக்கம் என்று நடப்புத் தலைவர் ராஜ் முஹம்மத் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 10:43 pm
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் 8.4 கிலோமீட்டர் நீளமான சுவரை அமைக்கும் தாய்லாந்து
September 11, 2026, 9:51 pm
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல்: 25 ஆண்டுகள் நிறைவு
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
