செய்திகள் உலகம்
வேர்கள் வேறுபட்டிருக்கலாம்.; ஆனால் அனைவரும் சிங்கப்பூரர்கள்: கடையநல்லூர் முஸ்லிம் லீக் சங்கக் கூட்டத்தில் பிரதமர் வோங்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் வெவ்வேறு சமூகங்கள் ஒன்றுசேர்ந்து பணியாற்றுவதைத் தொடரவேண்டும்; சமூகத்தை ஒன்றிணைக்கும் பிணைப்புகளை வலுப்படுத்தவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் 85ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் அவர் பேசினார்.
உலகம் முழுவதும் பல சமுதாயங்கள் பிளவுபட்டு நிற்கின்றன.
இதனைச் சிங்கப்பூர் புறக்கணித்துவிடமுடியாது.
சிங்கப்பூர் சமுதாயத்தை ஒற்றுமையாகவும் உறுதியாகவும் வைத்திருக்கும் பணி அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்றார் பிரதமர் வோங்.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சமூகத்திற்கு அப்பாற்பட்டுப் பல உறவுகளை வளர்த்துக்கொண்டது;
இதன் மூலம் சமுதாயம் மேம்பட்டது; சிங்கப்பூருக்கு அது பெரும் பங்காற்றி உள்ளது என்றார் வோங்.
இது சிங்கப்பூரின் கதையைப் போன்றுள்ளது என்றார் அவர்.
வேர்களும் பின்னணிகளும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அனைவரும் சிங்கப்பூரர்கள்.
முந்தைய தலைமுறையினர் விதைத்த விதைகள் நல்ல அறுவடையைத் தந்துள்ளன.
இனி அடுத்த தலைமுறையினர் அறுவடை செய்வதற்கான விதைகளை விதைக்கவேண்டும் என்றார் பிரதமர் வோங்.
இவ்வாறு செய்தால் அடுத்தடுத்த தலைமுறையினர் பலன் பெறுவர்; இந்திய முஸ்லிம் சமூகம் வளரும்; இது மேலும் ஒன்றிணைந்த, ஒற்றுமையான சிங்கப்பூருக்கு வழிவகுக்கும் என்றார் வோங்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 10:43 pm
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் 8.4 கிலோமீட்டர் நீளமான சுவரை அமைக்கும் தாய்லாந்து
September 11, 2026, 9:51 pm
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல்: 25 ஆண்டுகள் நிறைவு
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 10, 2026, 8:00 am
