நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட நம்பிக்கை கூட்டணி தயார்: ஆடம் அட்லி

அலோர்காஜா:

மலாக்கா நம்பிக்கை கூட்டணிமாநிலத் தேர்தல் ஒரு அரசியல் போட்டிக் களமாக இருக்க வேண்டுமே தவிர, மக்களிடையே உறவுகளையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும் வகையில் பிளவை ஏற்படுத்தக் கூடாது என விரும்புகிறது.

மலாக்கா கெஅடிலான் மாநிலத் தலைமை மன்றத்தின் தற்காலிகத் தலைவர் ஆடம் அட்லி அப்துல் ஹலீம் இதனை கூறினார்.


தேர்தலில் நடக்கும் போட்டியானது, மக்களின் நலனுக்காக அரசியல் கட்சிகள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்துவிடக் கூடாது.

மக்கள், குறிப்பாக வாக்காளர்கள், இந்தத் தேர்தல் களத்தைப் பிளவுக்கான களமாகப் பார்க்கக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம்.

தேர்தலில் போட்டியிடுவது மாநிலத்திற்குள் உள்ள உறவுகளையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக் கூடாது.

இன்று இங்குள்ள பத்து பெரெண்டாமில், காம்போங் அங்கட் மடானி விழாவைத் தொடங்கி வைத்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

ஹாங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஆடம் அட்லி, மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஒற்றுமை அரசாங்கம் முழுவதும், நம்பிக்கை கூட்டணி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் என்று கூறினார்.

சமூகம் விரும்பும் அரசியலைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் நம்பிக்கை கூட்டணி ஒரு அங்கமாக இருக்க விரும்புவதாகவும், அத்துடன் அரசியல் கட்சிகளால் ஒன்றிணைந்து செயல்படவோ அல்லது சமூகத்தை ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது என்ற எண்ணத்தை மாற்றவும் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset