செய்திகள் மலேசியா
குறைக்கடத்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க மலேசியாவும் இந்தியாவும் விருப்பம்
புதுடில்லி:
முதலீடு, பயிற்சி, விநியோகச் சங்கிலி உள்ளிட்ட குறைக்கடத்தித் துறையில் மலேசியாவும் இந்தியாவும் மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற விரும்புகின்றன.
இன்று நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய சந்திப்பின்போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகளின் நிறுவனங்களும் எவ்வாறு இணைந்து செயல்படலாம், இத்துறையில் முதலீட்டை அதிகரிக்கலாம் என்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கும், மலேசியப் பொருட்கள் இந்தியச் சந்தையில் நுழைவதை எளிதாக்கவும் விரைவுபடுத்தவும் வழிமுறைகளை ஆராய்வதற்கும் அன்வரும் மோடியும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
சுற்றுலா, பயணத்தை மேம்படுத்துவதற்காக, மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் இரு தரப்பினரும் பரிசீலித்தனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர், இந்தியா அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 5:21 pm
அரசியல் அல்ல, நேர நெருக்கடியே காரணம்: பிரதமரின் தமிழக பயணம் ரத்தானது குறித்து டத்தோஸ்ரீ ரமணன் முற்றுப்புள்ளி
September 12, 2026, 4:49 pm
அரசாங்கத்தில் பதவிகளில் இல்லாததால் மஇகா பலவீனமாகிவிட்டது என்று அர்த்தமல்ல: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 12, 2026, 2:38 pm
மலாக்கா தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட நம்பிக்கை கூட்டணி தயார்: ஆடம் அட்லி
September 12, 2026, 2:37 pm
ஈரானுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த மலேசியா நோக்கம் கொண்டுள்ளது: பிரதமர்
September 12, 2026, 1:31 pm
