நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலச்சரிவு: வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 263.6 கிலோமீட்டர் பகுதியில் இடதுபுறப் பாதை மூடப்பட்டது: போலிஸ்

ஈப்போ:

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய பாதையில், 263.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலச்சரிவுப் பகுதியில், 262.8 கிலோமீட்டர் முதல் 263.8 கிலோமீட்டர் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பு கூம்புகளை நிறுவுவதன் மூலம் இடதுபுறப் பாதை மூடப்படும்.

பேரா போலிஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் அபிடின் இதனை கூறினார்.
இந்தப் பாதை மூடல் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும், தற்போது எதிர் திசை போக்குவரத்து செயல்படுத்தப்படவில்லை.

அப்பகுதியின் சூழ்நிலையைப் பொறுத்து போக்குவரத்து அவ்வப்போது கண்காணிக்கப்படும் என்றும் கூறினார்.

நிலச்சரிவுப் பகுதியையும், வழித்தடத்தில் போக்குவரத்து நடமாட்டத்தையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க ஏதுவாக, விஸ்டா பாயிண்ட் பகுதியில் உள்ள  சிசிடிவி கேமராக்கள், சம்பவம் நடந்த இடத்தை நோக்கித் திருப்பப்படும்.என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, காவல்துறை, பிளஸ் மலேசியா, அது தொடர்பான முகமைகள் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset