செய்திகள் மலேசியா
கிராமப்புற வட்டார மேம்பாட்டு அமைச்சிற்கான நிதிகள் தடுக்கப்பட்டதால் சபாவில் 14 பிரம்மாண்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
கிராமப்புற வட்டார மேம்பாட்டு அமைச்சிற்கான உரிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாததால், சபாவில் கிராமப்புற சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டுவது தொடர்பான மொத்தம் 14 பிரம்மாண்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் இந்த விவகாரத்தை எழுப்பிய கோட்டா பெலுட் அம்னோ பிரிவுத் தலைவர், அசுவான் மர்ஜான் இதனை கூறினார்.
இந்த ரத்து நடவடிக்கை இறுதியில் சபா மக்களையும், குறிப்பாக கிராமப்புற, உட்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களையும் பாதித்ததாகக் கூறினார்.
அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததால், சபாவில் உள்ள 14 மாபெரும் திட்டங்கள், குறிப்பாக அமைச்சின் கீழ் கிராமப்புறச் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டும் பணிகள் ரத்து செய்யப்பட நேர்ந்தது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்னோ தலைவரும் அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
கருவூலத்தின் பொதுச்செயலாளர் கூறியுள்ளபடி, அமைச்சால் ஒதுக்கீட்டை விட அதிகமாக எப்படிச் செலவு செய்ய முடியும்.
அது சரிதானே என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 5:21 pm
அரசியல் அல்ல, நேர நெருக்கடியே காரணம்: பிரதமரின் தமிழக பயணம் ரத்தானது குறித்து டத்தோஸ்ரீ ரமணன் முற்றுப்புள்ளி
September 12, 2026, 4:56 pm
குறைக்கடத்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க மலேசியாவும் இந்தியாவும் விருப்பம்
September 12, 2026, 4:49 pm
அரசாங்கத்தில் பதவிகளில் இல்லாததால் மஇகா பலவீனமாகிவிட்டது என்று அர்த்தமல்ல: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 12, 2026, 2:38 pm
மலாக்கா தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட நம்பிக்கை கூட்டணி தயார்: ஆடம் அட்லி
September 12, 2026, 2:37 pm
ஈரானுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த மலேசியா நோக்கம் கொண்டுள்ளது: பிரதமர்
September 12, 2026, 1:31 pm
