நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீன, இந்தியர்களின் வாக்குகளின் அதிகரிப்பு; மஇகா, மசீசவின் வெற்றிக்குச் சான்றாகும்: அஷ்ராஃப்

கோலாலம்பூர்:

சமீபத்தில் நடந்த ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணிக்கு சீன,  இந்திய வாக்காளர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு அதிகரித்திருப்பது, மஇகா, மசீச தலைமையின் வெற்றிக்குச் சான்றாகும் என்று அஷ்ராஃப் வஜ்தி துசுகி கூறினார்.

இந்த ஆதரவு மீண்டும் எழுச்சி பெற்றதற்கு, மசீச தலைவர் வீ கா சியோங், மஇகா தலைவர் டான்ஶ்ரீ எஸ். விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அம்னோ பொதுச்செயலாளர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

2022-ல், ஜொகூரில் சீன வாக்காளர்களின் ஆதரவு வெறும் 9.5% ஆக இருந்தது. இந்த முறை, 2026 மாநிலத் தேர்தலின் போது, ​​அது 20% ஆக, இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

நெகிரி செம்பிலானிலும் இதே போக்குதான் காணப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய முன்னணிக்கு சீன வாக்காளர்களின் ஆதரவு வெறும் 8.7% ஆக இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு அது 14% ஆக அதிகரித்துள்ளது என்று 2026 அம்னோ பொதுப் பேரவைக்கு தொடர்பாக ஆற்றிய தனது உரையில் அவர் கூறினார்.

ஜொகூரில் தேசிய முன்னணி பெற்ற இந்திய இன வாக்குகளும், 2022-ல் வெறும் 18.9% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு PRN-ல் 54.8% ஆகக் கணிசமாக அதிகரித்துள்ளதாக அஸ்ராஃப் கூறினார்.

நெகிரி செம்பிலானில், 2022-ல் எங்களுக்கான இந்திய வாக்குகள் வெறும் 17.6% ஆக இருந்தது.  ஆனால் கடந்த மாத தேர்தகில் 49.6% இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களித்தனர்.

இந்த ஆண்டு நடந்த இரண்டு PRN-களிலும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது தேசிய முன்னணி தான் அதிக இந்திய வாக்குகளைப் பெற்றது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset