நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ பொதுப்பேரவையில் பாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்பு 

கோலாலம்பூர்: 

2026 அம்னோ பொதுப்பேரவையில் பாஸ் கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

மேலும் சில பாஸ் கட்சி தலைவர்கள் அம்னோவின் பொதுப்பேரவையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர் 

பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மத், பொது செயலாளர் தக்கியுடின் ஹசான், பாஸ் கட்சி தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபட்லி ஷாரி ஆகியோர் பொதுப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். 

பாஸ் கட்சி தலைவர்களின் வருகையானது மலேசிய அரசியல் வட்டாரத்தில் இரு கட்சிகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் கிளாந்தான் நகரில் நடைபெற்ற பாஸ் கட்சியின் மாநாட்டிற்கு அம்னோ தலைவர்கள் சென்று கலந்துகொண்டனர். அதற்குப் பிரதிபலாகவே தற்பொழுது பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் அம்னோவின் பொதுப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். 

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலின் போது இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு ஏற்பட்டுள்ளது. 

செப்டம்பர் 1ஆம் தேதியன்று அம்னோ பொதுப்பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுத்தீன் உறுதி செய்திருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset